''மன்னியுங்கள், திருடியது கொரோனா தடுப்பூசி என்று தெரியாது'' - திருப்பிவைத்த திருடர்

''மன்னியுங்கள், திருடியது கொரோனா தடுப்பூசி என்று தெரியாது'' - திருப்பிவைத்த திருடர்
''மன்னியுங்கள், திருடியது கொரோனா தடுப்பூசி என்று தெரியாது'' - திருப்பிவைத்த திருடர்

ஹரியானா அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிகளை திருடிய நபர், அதனை காவல் நிலையத்திற்கு அருகே விட்டுச்சென்றார்.

ஹரியானா மாநிலம் ஜிந்த் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த 1,270 டோஸ் கோவிஷீல்டு மற்றும் 440 கோவாக்சின் தடுப்பூசிகள் திருடுப்போனதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜிந்த் காவல்நிலையத்தின் வெளியே உள்ளே டீக்கடையில் ஒரு பாலித்தீன் பை ஒன்று கிடந்தது. காவல்துறையினர் அதனை திறந்து பார்த்தபோது, அதில் ஏராளமான கொரோனா தடுப்பூசிகள் இருப்பது தெரியவந்தது.

அதனுடன் இருந்த குறிப்பில், ''மன்னித்துவிடுங்கள், மருத்துவமனையில் நான் திருடியது கொரோனா தடுப்பூசி என்று தெரியாது'' என எழுதப்பட்டிருந்தது.

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் தினமும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துவரும் சூழலில், மருந்து தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி விலையேற்றம், ஆக்சிஜன் வேறு மாநிலங்களுக்கு திருப்பப்படுதல் என்று பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருவது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com