“மூன்று அணி வந்தால் ஒருவாரத்திற்கு 6 பிரதமர்கள்” - அமித்ஷா

“மூன்று அணி வந்தால் ஒருவாரத்திற்கு 6 பிரதமர்கள்” - அமித்ஷா

“மூன்று அணி வந்தால் ஒருவாரத்திற்கு 6 பிரதமர்கள்” - அமித்ஷா
Published on

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதில் பாரதிய ஜனதா உறுதியாக இருப்பதாக அக்கட்சித் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் பொதுக் கூட்டம் ஒன்றில் பாஜக தலைவர் அமித் ஷா கலந்துக் கொண்டு பேசினார். அப்போது, அயோத்தியில் தற்போது ராமர் சிலை உள்ள தற்காலிக வழிபாட்டிடத்திலேயே கோயில் அமையும் என்று தெரிவித்தார். 

கோயில் கட்டுவதற்கு என்னென்ன முயற்சிகள் செய்ய வேண்டுமோ அது ‌அனைத்தையும் தாங்கள் செய்து வருவதாகவும் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் மட்டும் முட்டுக்கட்டை போடாவிட்டால் தற்போதே கோயில் கட்டும் பணிகள் தொடங்கிவிடும் என்றும் அமித் ஷா பேசினார். 

எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நாட்டில் ஒரு வாரத்தில் 6 பிரதமர்க‌ள் ஆட்சி புரியும் நிலை ஏற்படும் என அவர் கிண்டல் அடித்தார். எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் திங்கள் கிழமை அகிலேஷ் யாதவும், செவ்வாய் கிழமை மாயாவதியும் பிரத‌மராக இருப்பார்கள் ‌என்றார்.
 

புதன்கிழமை மம்தா பானர்ஜியும் வியாழக்கிழமை தேவ கவுடாவும் பிரதமராக இருப்பா‌ர்கள் என அமித் ஷா தெரிவித்தார். சனிக்கிழமை ஸ்டாலின் பிரதமராக இருப்பார் என்றும் ஞாயிற்றுக்கிழமை ஒட்டுமொத்த நாட்டுக்கும் விடுமுறை விடப்படும் என்றும் அமித் ஷா பேசினார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com