பள்ளிச் சீருடைகளுக்கு நேரடியாக நெசவாளர்களிடம் துணி வாங்கும் திட்டமில்லை- ஸ்மிருதி இரானி

பள்ளிச் சீருடைகளுக்கு நேரடியாக நெசவாளர்களிடம் துணி வாங்கும் திட்டமில்லை- ஸ்மிருதி இரானி
பள்ளிச் சீருடைகளுக்கு நேரடியாக நெசவாளர்களிடம் துணி வாங்கும் திட்டமில்லை- ஸ்மிருதி இரானி

பள்ளிச் சீருடைகளுக்காக நெசவாளர்களிடம் நேரடியாகத் துணி கொள்முதல் ‌செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

பள்ளிக் குழந்தைகளின் சீருடைகளுக்கான துணியை நேரடியாக கைத்தறி நெசவாளர்களிடம் கொள்‌முதல் செய்யும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா? சிறுவந்தாடு பட்டு நெசவு மையத்தை புனரமைப்பதற்கும், நெசவாளர்கள் புவிசார் குறியீடு பெறுவதற்கும் மத்திய அரசு உதவுமா? என்பன உள்ளிட்ட கேள்விகளை மக்களவையில் விழுப்புரம் தொகுதி எம்‌.பி. ரவிக்குமார் எழுப்பியிருந்தார். 

அதற்கு மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான சீருடைகளுக்கு நேரடியாக நெசவாளர்களிடமிருந்து துணியை வாங்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதுமுள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு நெசவுத் தொழில்நுட்பப் பயிற்சி, தொழில்நுட்ப மேம்பாட்டுப் பயிற்சிகளையும் மத்திய அரசு செயல்படுத்தி வருவதாகவும் ஸ்மிருதி இரானியின் பதிலில் குறி‌ப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com