உ.பி.யில் எந்தெந்த மாவட்டங்கள் கால்நடைகள் இல்லா தெருக்கள்?-யோகி ஆதித்யநாத் தகவல்

உ.பி.யில் எந்தெந்த மாவட்டங்கள் கால்நடைகள் இல்லா தெருக்கள்?-யோகி ஆதித்யநாத் தகவல்
உ.பி.யில் எந்தெந்த மாவட்டங்கள் கால்நடைகள் இல்லா தெருக்கள்?-யோகி ஆதித்யநாத் தகவல்

தெருவில் திரியும் கால்நடைகளைக் கையாள்வதற்கான புதிய கொள்கையை உருவாக்குவதாக பிரதமர் மோடி உறுதியளித்ததைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 75 மாவட்டங்களில் 44 மாவட்டங்கள் தெருக் கால்நடைகள் இல்லாதவை எனச் சான்றிதழ் பெற்றுள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

வரும் மார்ச் 10 ஆம் தேதிக்குப் பிறகு தெருக் கால்நடைகளைக் கையாள்வதற்கான புதிய கொள்கையை உருவாக்குவதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார், ஆனால் இந்த பிரச்சனை மாநிலத்தில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே உள்ளது என்று உத்தரப்பிரதேச அரசு கூறியுள்ளது.

மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மண்டி பரிஷத் வரி மூலம் பெறும் வருமானத்தில் 3 சதவீதம் கௌசேவா ஆயோக் மூலம் பதிவு செய்யப்பட்ட கோசாலைகளில் விடப்படும் கால்நடைகளின் நலனுக்காக செலவிடப்படும் என்று தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச கௌசாலா சட்டத்தின் கீழ் மாநிலத்தில் தற்போது சுயஉதவி குழுக்களால் நடத்தப்படும் 572 கோசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அவற்றில் தற்போது 394 கோசாலைகள் செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பதிவு செய்யப்பட்ட 45 கோசாலைகளுக்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மறுபுறம், தெருவில் திரியும் கால்நடைகளுக்கு உணவளிக்க சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு ரூ.474 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் 75 மாவட்டங்களுக்கும் கால்நடை பராமரிப்புத் துறையின் அலுவலர்கள் தொடர்ந்து வருகை தந்து கோசாலைகளைக் கண்காணித்து பிரச்னைகளைத் தீர்ப்பதாக அரசு கூறுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை உன்னாவ் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கூறுகையில், "நடந்து வரும் சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும், தெருக் கால்நடைகளின் பிரச்னைக்கு தீர்வு காண புதிய ஏற்பாடு செய்யப்படும். மக்கள் மாட்டுச் சாணத்தில் இருந்து சம்பாதிக்கும் வகையில் புதிய முறையை நான் கொண்டு வருவேன்" என்று உறுதியளித்தார்.

இது தொடர்பாக பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், சட்டவிரோத இறைச்சிக் கூடங்களை முற்றிலுமாக மூடிவிட்டதாகவும், 9 லட்சத்துக்கும் அதிகமான தெரு கால்நடைகள் காப்பகங்களில் இருப்பதாகவும் கூறினார். இயற்கை விவசாயத்திற்காக தெருவில் திரிந்த கால்நடைகளைப் பயன்படுத்துவதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது எனவும் தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com