தேக்கடியில் புலிகள் பாதுகாப்பு கருத்தரங்கு

தேக்கடியில் புலிகள் பாதுகாப்பு கருத்தரங்கு

தேக்கடியில் புலிகள் பாதுகாப்பு கருத்தரங்கு
Published on

கேரள மாநிலம் தேக்கடியில் தேசிய விலங்கான புலிகளை பாதுகாப்பது குறித்த கருந்தரங்கை மத்திய வனத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் துவங்கி வைத்தார்.

இந்தியாவின் தேசிய விலங்கான புலிகளைக் காப்பது குறித்த இக்கருத்தரங்கு இரண்டு நாள் நடைபெறுகிறது. தேசிய புலிகள் ஆணைய கட்டுப்பாட்டில் 50 புலிகள் காப்பங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் புலிகளை காக்கவும், அவை வாழ்வதற்கு ஏற்ற இயற்கைச் சூழலை உருவாக்கவும், புலிகள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்‌பட்டு வருகிறது.  அதன் ஒரு கட்டமாக, அகில இந்திய அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கு தேக்கடியில் நடைபெற்று வருகிறது. கேரள வனத்துறை அமைச்சர் கே.ராஜு மற்றும் தேசிய புலிகள் ஆணைய அதிகாரிகள் கலந்து கொண்ட இக்கருத்தரங்கில், புலிகள் வாழ்வியல் மேம்பாடு குறித்த பல்வேறு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com