குடிநீர் கேட்டு அலுவலர் காலில் விழுந்து கதறிய இளைஞர் !

குடிநீர் கேட்டு அலுவலர் காலில் விழுந்து கதறிய இளைஞர் !

குடிநீர் கேட்டு அலுவலர் காலில் விழுந்து கதறிய இளைஞர் !
Published on

குஜராத் மாநிலம் வடோதரா அருகே குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலர் காலில் விழுந்து இளைஞர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார். 

குஜராத் மாநிலம் வடோதரா அருகே ஹனுமன் நகர் பகுதியில் கடந்த நான்கு மாதங்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கு பலமுறை மனு அளித்தும் எந்த தீர்வும் காணப்படாத நிலையில் ஹனுமன் நகர மக்கள் ஒன்றுகூடி நகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். காலி மண்பானையுடன் சென்ற பெண்கள், நகராட்சி அலுவலகத்தின் நடுவே மண்பானையை கீழே போட்டு உடைத்தனர். இதனையடுத்து நகராட்சி அலுவலரிடம் தண்ணீர் விநியோகிக்கும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அங்கிருந்த இளைஞர் ஒருவர் நகராட்சி அலுவலரின் காலில் விழுந்தார்.

இளைஞர் நீண்ட நேரம் அலுவலரின் காலை பிடித்தவாறு தண்ணீர் விநியோகிக்கும்படி மன்றாடியதால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு கூடிய பிற பெண்களும் அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தண்ணீர் விரைவில் விநியோகிக்கப்படும் என்ற அதிகாரி தெரிவித்ததையடுத்து அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com