இருசக்கர வாகனத்தை நிறுத்தச் சென்ற பெண் - வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சோகம்

இருசக்கர வாகனத்தை நிறுத்தச் சென்ற பெண் - வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சோகம்
இருசக்கர வாகனத்தை நிறுத்தச் சென்ற பெண் - வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சோகம்

புதுச்சேரியில் வாகனத்தை ஓரமாக நிறுத்தச் சென்ற பெண் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி சண்முகாபுரம், வடக்கு பாரதிபுரத்தில் வசித்து வருபவர் சசிகுமார். உணவகம் நடத்தி வரும் இவரது மனைவி ஹசினா பேகம் (35). இவர்கள் வசிக்கும் வீடு வெள்ளவாரி ஓடை அருகே உள்ளது. புதுச்சேரியில் இன்று காலை முதல் பெய்த கனமழையால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் ஹசினா தனது இரு சக்கர வாகனத்தை ஓரம் நிறுத்துவதற்காக சென்றதாகவும் அப்போது வாகனத்துடன் அவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனை கண்ட ராஜ்குமார் என்பவர் தீயணைப்பு நிலையத்திற்கும், மேட்டுபாளையம் காவல் நிலையத்திற்கும் இது குறித்து தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் ஹசினா பேகத்தை தேடினர். இதில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஹசினாவின் வாகனம் மட்டும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக மேட்டுபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com