ஆம்புலன்ஸ் வராததால் சாலையில் குழந்தையை பெற்றெடுத்த பெண்
உத்தரப் பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் வராததால் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் சாலையிலேயே குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ளது சோனே என்ற கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் நீண்ட நேரம் காத்திருந்தும் ஆம்புலன்ஸ் வராததால் நிறைமாத கர்ப்பிணி மருத்துவமனையை நோக்கி நடக்கத் தொடங்கினார். அப்போது அவருக்கு வலி அதிகமானதால் சாலையிலேயே அவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டு குழந்தை பிறந்தது.
தற்போதும் தாயும் குழந்தையும் நலமுடன் உள்ளனர். சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் வராததால் தான் இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர். மேலும் தங்கள் கிராமங்களில் ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் வராததால் பல நோயாளிகள் அவதிப்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.