இந்தியா
ஏடிஎம்மில் ஒருபக்கம் வெள்ளைத் தாளாக வந்த 500 ரூபாய் நோட்டு..!
ஏடிஎம்மில் ஒருபக்கம் வெள்ளைத் தாளாக வந்த 500 ரூபாய் நோட்டு..!
ஒருபுறம் அச்சடிக்கப்படாத நிலையில், 500 ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்மில் வந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் உள்ள சில ஏடிஎம்களில் நேற்று பணம் எடுத்த மக்களுக்கு, 500 ரூபாய் நோட்டுகள் ஒருபக்கம் அச்சடிக்கப்படாமல் வெள்ளைத் தாளாக வந்தன. இதுதொடர்பாக வங்கிக்கு மக்கள் தகவல் அளித்ததும், அதிகாரிகள் வந்து அந்த ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொண்டு வேறு மாற்றித் தந்தனர்.
மத்திய பிரதேசத்தின் ஷெபூரில் உள்ள ஏடிஎம்களில் வந்த 500 ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படம் இல்லாமல் இருந்த சம்பவம் நடந்த சில நாட்களில், ஒருபக்கம் முழுவதும் அச்சடிக்காத ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்மில் இடம்பெற்றது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

