தொடர் மழை: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்வு

தொடர் மழை: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்வு
தொடர் மழை: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்வு
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடரும் மழையால், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
இடுக்கி, குமுளி, தேக்கடி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம், 136 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 5 ஆயிரத்து 250 கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிற்கான நீர் திறப்பு விநாடிக்கு 2 ஆயிரத்து 200 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியதும் முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படவுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com