கால் இல்லை என்றால் என்ன? கட்டிடத் தொழில் இருக்கே? : வைரலான முதியவர் வீடியோ

கால் இல்லை என்றால் என்ன? கட்டிடத் தொழில் இருக்கே? : வைரலான முதியவர் வீடியோ

கால் இல்லை என்றால் என்ன? கட்டிடத் தொழில் இருக்கே? : வைரலான முதியவர் வீடியோ
Published on

கால் இல்லாத ஒரு முதியவர் கட்டிடத் தொழில் செய்து வரும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பலர் பல லட்சம் செலவு செய்து சாதனை செய்கிறார்கள். ஆனால் இந்தியா போன்ற ஒரு நாட்டில், ஏழை மக்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதே  பெரும் சாதனையாகதான் உள்ளது என்று நிரூபித்திருக்கிறார் ஒரு முதியவர். அப்படி என்னதான் செய்தார். ஒன்றும் செய்யவில்லை. தனக்கு இருக்கும் குறைப்பாட்டை பெரிதாக எடுத்துக் கொண்டு மூலையில் முடங்கிவிடாமல் உழைக்கிறார். அவரது உழைப்பில் குடும்பத்தினருக்கு சோறு போடுகிறார். அதுவே சாதனைதானே? 

ராஜஸ்தானை சேர்ந்தவர் இந்தக் கோபரா சிங். ஆனால் இவர் இப்போது தனது சொந்த மாநிலத்தில் இல்லை. பிழைப்பதற்காக டெல்லியில் வசிக்கிறார். இவருக்கு ஒரு கால் இல்லை. கால் இல்லாத இவர் கடினமான வேலைக்கு லாயக்கு இல்லாதவர் எனப் பலரும் அவரை புறந்தள்ளினர். அப்போது தனது வாழ்க்கை எளிதானதல்ல; போராட்டமானது என்று முடிவு செய்தார். இன்று ஒரு கட்டிட தொழிலாளியாக தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார் கோபரா சிங்.

இந்த வயதான காலத்திலும் மூட்டை மூட்டையாக சிமெண்ட் மூட்டைகளை தூக்குவது, அதை கலவைக்காக கலப்பது என்று எதற்கும் இவர் ஒருவர்தான். துணைக்குகூட யாரையும் இவர் வைத்துக் கொள்வதில்லை. அவரே தண்ணீரை எடுக்கிறார். அவரே கலைவையை கலக்கிறார். கால் இல்லை என்றாலும் ஒரு இடத்தில் நிற்காமல் பம்பரமாக சுழல்கிறார். அந்த அளவுக்கு கடின உழைப்பாளியாக உள்ள கோபரா சிங்கை பார்த்த வினோத் ஷோரி என்பவர் அதனை அப்படியே வீடியோவாக பதிவு செய்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதனைக் கண்ட நெட்டிசன்கள் அவரை கொண்டாடித் தீர்த்துவிட்டனர்.

இன்று ஃபேஸ்புக்கில் கோபரா சிங் ஒரு வைரல் கன்டெண்ட். இதுவரை இவரது வீடியோவை 60 லட்சத்திற்கும் மேலானவர்கள் பார்வையிட்டுள்ளனர். 70 ஆயிரம் வரை ஷேர் செய்துள்ளனர். இந்தக் கோபரா சிங் யார்? அவருக்கு என்ன உதவி செய்ய வேண்டும் எனப் பலர் நேசக்கரம் நீட்டி வருகின்றனர்.

வாழ்வதற்கு வழியில்லை என்று சொந்த மாநிலமான ராஜஸ்தானில் இருந்து பிழைப்புத் தேடி டெல்லி சென்ற இவருக்கு இன்று தேச முழுக்க நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். அவரது கஷ்டத்தைக் கண்டு கண்ணீர் வடித்த பலர் உதவி செய்ய முன்வந்திருக்கிறார்கள். இத்தனைக்கும் கோபரா சிங் ஒன்றும் செய்யவில்லை. அவர் தனது வேலைதான் செய்தார். அதை ஒழுங்காக செய்தார். ஆகவே இன்று வைரலாகி இருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com