பட்டியலின மக்களுக்கு முடி வெட்டிய தொழிலாளி - குடும்பத்தையே ஒதுக்கி வைத்த கிராமத்தினர்!

பட்டியலின மக்களுக்கு முடி வெட்டிய தொழிலாளி - குடும்பத்தையே ஒதுக்கி வைத்த கிராமத்தினர்!
பட்டியலின மக்களுக்கு முடி வெட்டிய தொழிலாளி - குடும்பத்தையே ஒதுக்கி வைத்த கிராமத்தினர்!

இந்தியாவில் எத்தனை மங்கல்யான்களை விண்ணில் செலுத்தி வளர்ச்சியடைந்த நாடாக காட்டிகொண்டாலும் இன்னும் சாதி பாகுபாடுகள் மட்டும் ஒழிந்தபாடில்லை. கர்நாடக மாநிலம் மைசூரில் பட்டியலின மக்களுக்கு முடிவெட்டியதால் முடித்திருத்தம் செய்யும் தொழிலாளியையும் அவரது குடும்பத்தினரையும் அந்த கிராமத்தினர் ஒதுக்கி வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடோடு இந்த சம்பவத்திற்கு பலத்த கண்டங்களும் எழுந்துள்ளன.

கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தின் ஹல்லாரே கிராமத்தைச் சேர்ந்த முடி திருத்தம் செய்யும் தொழிலாளி மல்லிகார்ஜுனன் ஷெட்டி. இவர், இந்த ஊரில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கு முடி வெட்டியுள்ளார். இதனால், மற்றொரு சாதி பிரிவினர் தொடர்ச்சியாக துன்புறுத்தி வந்ததையடுத்து
தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டச்சொல்லி துன்புறுத்துவதாகவும் வேதனையோடு புகார் அளித்துள்ளார் மல்லிகார்ஜுனன் ஷெட்டி.

இதுகுறித்து அவர் பேசும்போது, “மாவட்ட அதிகாரிகள் இப்பிரச்சனையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்வோம். ஏற்கனவே, எனக்கு இரண்டுமுறை இதேபோல் அபராதம் கட்டச்சொன்னார்கள். இரண்டு முறையும் கட்டினேன். மூன்றாவது முறையாக 50 ஆயிரம் கட்டச்சொன்னதோடு எங்களை ஒதுக்கியும் வைத்துவிட்டார்கள்” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com