\
ஊட்டி: பயன்படுத்தப்படாத கழிப்பறை கட்டடம் கலைக்கூடமாக மாற்றம்

ஊட்டி: பயன்படுத்தப்படாத கழிப்பறை கட்டடம் கலைக்கூடமாக மாற்றம்

ஊட்டி: பயன்படுத்தப்படாத கழிப்பறை கட்டடம் கலைக்கூடமாக மாற்றம்
Published on

ஊட்டியில் மக்கள் பயன்பாடின்றி இருந்த நகராட்சிக்கு சொந்தமான பழைய கழிப்பறை கட்டடம் ‘THE GALLERY ONE TWO’ என்ற பெயரில் கலை கண்காட்சி மையமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த பணியை உள்ளூர் மக்கள் குழுவாக இணைந்து மேற்கொண்டுள்ளனர். இந்த கட்டடத்தில் மினி நூலகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்திய ஆட்சிப் பணி அதிகாரி சுப்ரியா சாஹு இந்த செய்தியை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததன் மூலம் பொது வெளியில் பரவலாக அறியப்பட்டுள்ளது. கடந்த 2018இல் இந்த கலைக்கூடம் நிறுவப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

நகராட்சி சார்பில் புதிய கழிப்பறை கட்டப்பட்டு விட்டதால் இதற்கு அதிகாரிகளும் அனுமதி  கொடுத்துள்ளனர்.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com