''லாரி எங்களை நோக்கியே வந்தது'' - உன்னாவ் விவகார விபத்துக்குறித்து வாய்திறந்த பெண்!

''லாரி எங்களை நோக்கியே வந்தது'' - உன்னாவ் விவகார விபத்துக்குறித்து வாய்திறந்த பெண்!
''லாரி எங்களை நோக்கியே வந்தது'' - உன்னாவ் விவகார விபத்துக்குறித்து வாய்திறந்த பெண்!

உன்னாவ் பாலியல் புகாரளித்து விபத்தில் சிக்கிய பெண், விபத்து நடந்தது குறித்த தகவலை கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன

உன்னாவ் பகுதியில் பெண் ஒருவர் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் மீது பாலியல் புகார் அளித்தார். இதனையடுத்து அந்த எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் அந்தப் பெண்ணின் தந்தை சிறையில் மர்மான முறையில் கொலை செய்யப்பட்டார். அதன்பின்னர் புகாரளித்த பெண் சென்ற கார் மீது லாரி ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அப்பெண்ணின் தாய் மற்றும் உறவினர் ஒருவரும் உயிரிழந்தனர். அந்தப்பெண்ணும், வழக்கறிஞர் ஒருவரும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாலியல் வழக்கை முடிவுக்கு கொண்டு வர, பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் சூழலில், விபத்து குறித்து பாதிக்கப்பட்ட பெண் தகவல் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

விபத்து குறித்து தன்னுடைய உறவினர்களிடம் தகவல் தெரிவித்துள்ள அப்பெண், லாரி மிக வேகமாக தங்களை நோக்கியே வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், ''லாரிக்குள் சிக்கியதும் காரை மீண்டும் பின்னோக்கி எடுத்து லாரியில் இருந்து வெளிவருமாறு காரை ஓட்டிக்கொண்டு இருந்த வழக்கறிஞரிடம் சொன்னேன். ஆனால் லாரி மேலும் மேலும் மோதியது'' என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com