'பாரத ரத்னா' விருதுக்கு அப்பாற்பட்டவர் 'காந்தி' - உச்சநீதிமன்றம்
மகாத்மா காந்தி பாரத ரத்னா விருதுக்கு அப்பாற்பட்டவர் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை மகாத்மா காந்திக்கு வழங்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பாரத ரத்னா உள்ளிட்ட விருதுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர் மகாத்மா காந்தி என்றும் இந்த மனுவை விசாரிக்க இயலாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அப்போது வாதிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், பாரத ரத்னாவை விட தனிச்சிறப்பு வாய்ந்த விருதை மகாத்மாவுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மனுதாரர் சொல்லக்கூடிய விஷயம் புரிகிறது என்றும் அத்தகைய முடிவை எடுப்பது அரசின் கொள்கை சார்ந்த விஷயம் எனவும் குறிப்பிட்ட நீதிபதி, இதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறினார். மேலும், மனுதாரரின் கோரிக்கையை மத்திய அரசிடம் தெரிவிக்க அறிவுறுத்தி, மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.