இந்தியா
மூணாறில் உலாவரும் யானைகள்: வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் மக்கள் தவிப்பு
மூணாறில் உலாவரும் யானைகள்: வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் மக்கள் தவிப்பு
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றி திரியும் காட்டு யானைகள் விளைநிலங்களையும், வீடுகளையும் சேதப்படுத்தி வருவதால், பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அண்மையில் மூலத்தரா என்ற பகுதியில் நுழைந்த காட்டு யானைகள் அங்கிருந்த கட்டடங்களை சேதப்படுத்தி சென்றுள்ளன. மேலும், ஊருக்குள் புகுந்து வீடுகள், கடைகள் ஆகியவற்றையும் இடித்து விட்டு செல்வதால், அப்பகுதியில் வாழும் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். காட்டு யானைகளால் ஏற்பட்டிருக்கும் சேதங்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், விளைநிலங்களுக்குள் காட்டு யானைகள் புகாதவாறு தடுப்பு மின்கம்பி வேலிகளை அமைத்து, பதுங்கு குழிகளை வெட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படியுங்கள்: அதானி குழுமத்தின் வசம் வந்தது திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம்