\
மகனுக்கு சூடு வைத்த அம்மா

மகனுக்கு சூடு வைத்த அம்மா

மகனுக்கு சூடு வைத்த அம்மா
Published on

ஹைதராபாத்தில் இரண்டாவது கணவருடன் சேர்ந்து கொண்டு, 9 வயது மகனுக்கு சூடு வைத்து பெற்ற தாயே, கொடுமைப்படுத்தியச் சம்பவம் அதிர்ச்சியை ‌ஏற்படுத்தியுள்ளது.

அனுஷா என்பவர், கணவரை பிரிந்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டு ஜீடிமேட்லா பகுதியில் வசித்து வருகிறார். முதல் கணவருக்கு பிறந்த 9 வயது மகனை அடித்தும், சூடு வைத்தும் துன்புறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் தனது மகன் கொடுமைப் படுத்தப்படுவதாக அனுஷாவின் முதல் கணவர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிறுவனை மீட்டு தந்தையிடம் ஒப்படைத்துள்ளனர்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com