ஆந்திரா முதல் பஞ்சாப் வரை| தமிழகத்தை தாண்டி நாடெங்கும் பொங்கல் திருநாள் உற்சாகமாக கொண்டாடப்படும்!

தமிழகத்தில் பொங்கல் திருநாள் உற்சாகமாக கொண்டாடப்படும் நிலையில், நாட்டின் பிற மாநிலங்களிலும் இப்பண்டிகை பல்வேறு பெயர்களில் கொண்டாப்படுகிறது. இது குறித்த விரிவான தகவல்களை இப்போது பார்க்கலாம்.
பொங்கல்
பொங்கல் புதிய தலைமுறை

பல பெயர்களில் ஒரே திருநாள்:

தமிழகத்தில் பொங்கல் திருநாள் உற்சாகமாக கொண்டாடப்படும் நிலையில், நாட்டின் பிற மாநிலங்களிலும் இப்பண்டிகை பல்வேறு பெயர்களில் கொண்டாப்படுகிறது. இது குறித்த விரிவான தகவல்களை இப்போது பார்க்கலாம்

ஆந்திரா:

அறுவடைத் திருநாளான பொங்கல், தமிழகத்தைப் போலவே ஆந்திராவிலும் கொண்டாடப்படுகிறது. மகர சங்கராந்தி என்ற பெயரில் 4 நாட்கள் களைகட்டும் கொண்டாட்டத்தின் முதல் நாளான போகியன்று பழைய பொருட்களை தீ வைத்து எரிப்பது, இருப்பிடங்களை தூய்மை செய்வது இங்கும் உண்டு.

மகாராஷ்டிரா:

மகாராஷ்டிராவிலும்மகர சங்கராந்தி வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.

கர்நாடகா:

மற்றொரு அண்டை மாநிலமான கர்நாடகாவில் சங்கராந்தி என்ற பெயரில் இந்தத் திருநாள் கொண்டாடப்படுகிறது. காளைகளை தீமிதிக்க விடுவதும் கரும்புத் துண்டுகள், வெள்ளை எள் மற்றும் சர்க்கரையை பரிமாறிக் கொள்வது இந்நாளின் சிறப்பம்சமாகும்.

குஜராத்:

குஜராத் மக்கள் உத்தராயண் என்ற பெயரில் இந்த விழாவைக் கொண்டாடுகின்றனர். கண்கவரும் வண்ணமயமான பட்டங்களை பறக்க விடுவதும், வயதில் மூத்தவர்கள் இந்நன்னாளில் இளையோருக்கு பரிசுகள் தந்து ஆசிர்வதிப்பதும் வழக்கம்.

பொங்கல்
தஞ்சை: முதல் முறையாக சமத்துவ பொங்கல் கொண்டாடி மகிழ்ந்த நாடோடி பழங்குயினர்!

பஞ்சாப்:

பஞ்சாப் மாநிலத்தில் லோஹரி என்ற பெயரில் இத்திருநாள் கொண்டாடப்படுகிறது. தீயை மூட்டி அதைச் சுற்றி நண்பர்களுடனும் உறவினர்களுடனும் உற்சாகம் பொங்க பாங்ரா நடனம் ஆடுவது லோஹிரியின் சிறப்பம்சமாகும்.

உத்தர பிரதேச மாநிலத்திலும் பீகாரின் மேற்குப் பகுதியிலும் கிச்டி பர்வ், என்ற பெயரில் கொண்டாட்டங்கள் சிறக்கும்.

அலகாபாத்:

அலகாபாத் திரிவேணி சங்கமம் உள்ளிட்ட நீர் நிலைகளில் இந்நாளில் புனித நீராடுவது வழக்கமாக உள்ளது.

டெல்லி, ஹரியானா:

டெல்லி, ஹரியானா பகுதியில் சங்க்ராத் என்ற பெயரிலும் அசாமில் பொகாலி பிஹு என்ற பெயரிலும் கொண்டாட்டங்கள் களைகட்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com