ஆசியாவில் பணக்கார குடும்பமாக முகேஷ் அம்பானி குடும்பம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் பத்திரிகை நடத்திய ஆய்வில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
முகேஷ் அம்பானியின் குடும்பம் ஆசியாவின் 50 மிகப்பெரிய பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. முகேஷ் அம்பானி குடும்பத்தினரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ஓராண்டில் இரண்டரை மடங்கு உயர்ந்து சுமார் 3 லட்சம் கோடி ரூபாயை தொட்டுள்ளதாக ஃபோர்ப்ஸ் கூறியுள்ளது.
சாம்சங் நிறுவனத்தை நடத்தி வரும் லீ குடும்பத்தினரை முகேஷ் அம்பானி குடும்பத்தினர் 2வது இடத்துக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளனர். கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த சாம்சங் குழுமத்தின் லீ குடும்பம், 40.8 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்திற்கு இறங்கியுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவிலிருந்து மொத்தம் 18 இந்திய தொழிற் குடும்பங்கள் இடம்பெற்றுள்ளன.