சீன எல்லையில் நடந்தது என்ன? மோதலுக்கு எது காரணம்?: வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்

சீன எல்லையில் நடந்தது என்ன? மோதலுக்கு எது காரணம்?: வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்
சீன எல்லையில் நடந்தது என்ன? மோதலுக்கு எது காரணம்?: வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்

எல்லை பிரச்னை தொடர்பாக சீனாவுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய எல்லையான லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் நேற்றிரவு இந்தியா மற்றும் சீன வீரர்களிடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பிலிருந்தும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தியா தரப்பில் ராணுவ கமாண்டோ அதிகாரியான கர்னல் ஒருவரே உயிரிழந்துள்ள மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், “ஜூன் 15ஆம் தேதி மாலை மற்றும் இரவு நேரங்களில் ஏற்பட்ட மோதல் என்பது, சீன படைவீரர்கள் தங்களது நிலைகளை தன்னிச்சையாக மாற்ற முயன்றதன் காரணமாக நிகழ்ந்தது. இதில் இருதரப்பிலும் உயிரிழப்புகள், பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் இதனை அங்கு கண்காணிப்பில் இருந்த சீன உயரதிகாரிகள் ஒப்பந்தம் மூலம் தவிர்த்திருக்கலாம்” என தெரிவித்துள்ளது.

அத்துடன், “எல்லைப்பகுதிகளில் அமைதியை பேணுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அத்துடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்படும். அதே நேரத்தில் இந்தியாவின் இறையான்மை மற்றும் ஒருமைப்பாட்டை நிலைநாட்டுவதில் உறுதியாகவுள்ளோம். எல்லை விவகாரத்தை பொறுத்தவரையில் இந்தியாவின் அனைத்து நடவடிக்கைகளும் இந்திய எல்லைக்குள் மட்டும் இருக்கும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இதை சீனாவிடம் இருந்தும் எதிர்பார்க்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்திய பாதுகாப்பு படையினர்தான் நேற்றிரவு இரண்டு முறை கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் எல்லை மீறி நுழைந்ததாகவும், தங்கள் பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. அதன்பின்னரே சீன வீரர்கள் தரப்பிலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியா பிரச்னையை தூண்ட வேண்டாம் என்றும் சீன தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com