கொல்கத்தா
கொல்கத்தாFacebook

கொல்கத்தா மருத்துவர் வன்கொடுமை|சூறையாடப்பட்ட மருத்துவமனை; அடித்து வெளியேற்றிய காவல்துறை!

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில், மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய போராட்டம் நடத்தப்பட்டது. மருத்துவமனை சூறையாடப்பட்டதால் பதற்றம் அதிகரித்தது.
Published on

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பழமையான ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் பயிற்சி மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்டார்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தில், நீதி கேட்டு மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். ஆர்.ஜி.கர் மருத்துவமனை வளாகத்தில் இரவு போராட்டம் நடத்திய மாணவர்களை காவல்துறையினர் அடித்து வெளியேற்றினர்.

கொல்கத்தா
கேரளா | உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்து சென்றவர், குட்டித்தூக்கம் போட்டதால் காப்பாற்றப்பட்ட அதிசயம்!

இதனிடையே, மருத்துவமனையின் ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்டவை உடைக்கப்பட்டன. இதேபோல் அசன்சோல் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமானோர், செல்போன் டார்ச் அடித்து முழக்கம் எழுப்பினர். சிலிகுரியில், ஆள் உயர தீப்பந்தம் ஏந்தி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெற்றோரை சமாதானப்படுத்தும் முயற்சியில் இருக்கும்போது, தேவையற்ற வதந்திகள் பரபரப்படுவதாக காவல் ஆணையாளர் குற்றம்சாட்டினார்.

78 வது சுதந்திரம் கொண்டாடும் நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com