PM-CARES தொடர்பான ஆர்.டி.ஐ மனுவுக்கு தகவல் கொடுக்க மறுத்த பிரதம அமைச்சர் அலுவலகம்

PM-CARES தொடர்பான ஆர்.டி.ஐ மனுவுக்கு தகவல் கொடுக்க மறுத்த பிரதம அமைச்சர் அலுவலகம்
PM-CARES தொடர்பான ஆர்.டி.ஐ மனுவுக்கு தகவல் கொடுக்க மறுத்த பிரதம அமைச்சர் அலுவலகம்

ஆர்.டி.ஐ ஆர்வலரான லோகேஷ் பாத்ரா கடந்த ஏப்ரல் 2020 முதல் ஒவ்வொரு மாதமும் பிரதம மந்திரி அலுவலகத்தில் பெறப்பட்ட மற்றும் பதிலளிக்கப்பட்டுள்ள மொத்த ஆர்.டி.ஐ விண்ணப்பங்களின் எண்ணிக்கையையும், விவரங்களையும் அறிந்து கொள்ளும் வகையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அதோடு அந்த மனுவில் PM-CARES எனப்படும் பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம் மற்றும் பிரதமரின் தேசிய நிவாரண நிதி குறித்த தகவல்களையும் அவர் கொடுக்குமாறு கேட்டிருந்தார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு அவரது மனுவுக்கு பிரதம மந்திர அலுவலகம் பதிலளித்தது. அந்த பதிலில் பிரதம மந்திரி அலுவலகத்தில் பெறப்பட்ட ஒட்டுமொத்த ஆர்.டி.ஐ மனுக்களின் தரவுகளை வழங்கியுள்ளது. ஆனால் PM-CARES மற்றும் பிரதமரின் தேசிய நிவாரண நிதி குறித்த தகவல்களை தர மறுத்துள்ளது. 

“தாங்கள் கேட்ட தகவல்கள் முறையாக அலுவலகத்தில் தொகுக்கப்பட்டு பராமரிக்கப்படவில்லை. அது சம்பந்தமான விவரங்களை தொகுப்பதனால் இந்த அலுவலகத்தின் இயல்பான செயல்பாடுகளிலிருந்து திசை திருப்பும். அதனால் ஆர்.டி.ஐ சட்ட பிரிவு 7 (9) இன் கீழுள்ள விதிகளின் அடிப்படையில் இந்த தகவல்களை கொடுக்க இயலாது” என்று பிரதம மந்திரி அலுவலகத்தின் தலைமை பொது தகவல் அதிகாரி தெரிவித்துள்ளார். 

வழக்கமாக ஆர்.டி.ஐ -யில் கோரப்படும் விவரங்களுக்கு பதில் அளிப்பதற்கான விலக்கு அந்த சட்ட பிரிவின் 8 (1) வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் சட்ட பிரிவு 7 (9) ‘அலுவலகத்தின் இயல்பான செயல்பாடுகளிலிருந்து திசை திருப்புதல் அல்லது பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் விதிகளின் கீழ் பொருந்தும்’ என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது சட்டத்தை தவறாக பயன்படுத்துதலாகும் என தெரிவித்துள்ளார் முன்னாள் தலைமை தகவல் ஆணையரான வஜாஹத் ஹபீபுல்லா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com