\
இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்
Published on: 

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு வருகை தருகிறார். இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைக்காக அவர் இந்தியா வர உள்ளதாக வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

போரிஸ் ஜான்சன் கடந்த ஆண்டு 2 முறை இந்தியா வருவதாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் அச்சம் காரணமாக அவர் வரவில்லை. தற்போது நிலைமை சீராகியுள்ளதால், இங்கிலாந்து பிரதமரின் வருகை உறுதியாகியுள்ளது. இரு நாட்டு பிரதமர்களும் தொலைபேசியில் ஏற்கனவே பேசி, இந்தியா வருகை குறித்து பேசியுள்ளனர். இதைத் தொடர்ந்து போரிஸ் வரும் 22 ஆம் தேதி போரிஸ் ஜான்சன் இந்தியா வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கிளாஸ்கோவில் நடைபெற்ற காலநிலை மாற்ற உச்சிமாநாட்டில் இந்தியா - இங்கிலாந்து பிரதமர்களும் கடைசியாக நேரில் சந்தித்துக் கொண்டனர்.

இதையும் படிக்க: விவாதத்துக்குப் பின் குற்றவியல் அடையாள நடைமுறை மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com