“கொரோனாவால் தங்கள் குடும்பத்தினரை இழந்தவர்களிடம் பிரதமர் மன்னிப்பு கோர வேண்டும்” - ஓவைசி
“கொரோனா தொற்றால் தங்கள் குடும்பத்தினரை இழந்தவர்களிடம் பிரதமர் மன்னிப்பு கோர வேண்டும்” - அசதுத்தீன் ஓவைசி
“கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை வசதி கிடைக்காமலும், படுக்கை வசதி கிடைக்காமலும், ஆக்ஸிஜன் கிடைக்காமலும் தங்களது குடும்பத்தினரை இழந்தவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கோர வேண்டும்” என தெரிவித்துள்ளார் அனைத்திந்திய மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அசதுத்தீன் ஒவைசி.
“பிரதமர் மோடி நாடாளுமன்றத்தை கூட்டவும், பத்திரிக்கையாளர்களிடம் பேசவும் அஞ்சுகிறார். அதே நேரத்தில் சுடுகாடு மற்றும் இடுகாடு குறித்து மணிக்கணக்கில் பேசும் அவர் மருத்துவமனைகள் குறித்து பேசுவதே இல்லை. அதனால் தான் சொல்கிறேன் மருத்துவமனையில் முறையான சிகிச்சை கிடைக்காமலும், படுக்கை வசதி கிடைக்காமலும், ஆக்ஸிஜன் கிடைக்காமலும் கொரோனா தொற்றால் தங்கள் குடும்பத்தினரை இழந்தவர்களிடம் பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும். ஏனென்றால் இவை அனைத்திற்கும் அவர் தான் பொறுப்பு” என ட்வீட் செய்துள்ளார் அவர்.
அதோடு கொரோனா தடுப்பு மருந்து குறித்தும் அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.