“குறைந்தபட்ச வருமானத் திட்டம் வரலாற்று சிறப்புமிக்கது” - ப.சிதம்பரம்

“குறைந்தபட்ச வருமானத் திட்டம் வரலாற்று சிறப்புமிக்கது” - ப.சிதம்பரம்

“குறைந்தபட்ச வருமானத் திட்டம் வரலாற்று சிறப்புமிக்கது” - ப.சிதம்பரம்
Published on

குறைந்தபட்ச வருமான உறுதி திட்டம் ஏழைகளின் வாழ்வில் திருப்பு முனையை உருவாக்கும் என முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல், “காங்கிரஸ் கட்சி வரலாற்று சிறப்புமிக்க முடிவினை எடுத்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தால், குறைந்தபட்ச வருமானத்தை எல்லா ஏழைகளுக்கும் உறுதி செய்யும். அதாவது, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஏழை மக்களும் சராசரி வருமானத்தை பெறுவார்கள். இதனால், பசி, வறுமை எதுவும் இந்தியாவில் இருக்காது” என்றார்.

மேலும் அவர் பேசுகையில், “இந்த திட்டத்தை சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் என ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த திட்டத்தை நிறுவேற்றுவோம். நாங்கள் இரண்டு வேறுபட்ட இந்தியாவை விரும்பவில்லை. ஒரே ஒரு இந்தியா மட்டும் இருக்க விரும்புகிறோம்” என்று கூறினார்.

மேலும் இதுதொடர்பாக ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் கருத்து ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில், “நம்முடைய லட்சக்கணக்கான சகோதர, சகோதரிகள் வறுமையால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் நம்மால் புதிய இந்தியாவை உருவாக்க முடியாது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எங்களை ஆட்சியில் அமர்த்தினால், நாட்டில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் குறைந்தபட்ச வருவாய் உத்தரவாதத்தை காங்கிரஸ் அளிக்கும். இது வறுமை, பசியை ஒழிக்கும். இது எங்களுடைய திட்டம், எங்களுடைய வாக்குறுதி” என்று ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில்,  ராகுல் காந்தி அறிவித்துள்ள ‘ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமான உறுதி திட்டம்’ வரலாற்று சிறப்பு வாய்ந்தது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும், குறைந்தபட்ச வருமான உறுதி திட்டம் ஏழைகளின் வாழ்வில் திருப்பு முனையை உருவாக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் 2004 முதல் 2014 ஆம் ஆண்டில் 140 மில்லியன் மக்கள் வறுமையில் இருந்து மீட்டெடுக்கப்பட்டனர் எனவும் இப்போது வறுமையை இந்தியாவில் இருந்து விரட்டியடிக்க முயற்சி எடுக்க வேண்டும் எனவும் சிதம்பரம் கேட்டுக்கொண்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com