\
காவல் நிலையத்திலேயே காவலருக்கு உதை- உ.பி. பயங்கரத்தின் பகீர் வீடியோ

காவல் நிலையத்திலேயே காவலருக்கு உதை- உ.பி. பயங்கரத்தின் பகீர் வீடியோ

காவல் நிலையத்திலேயே காவலருக்கு உதை- உ.பி. பயங்கரத்தின் பகீர் வீடியோ
Published on: 

உத்தரப்பிரதேசத்தில் மியான்புரி என்ற ஊரில் உள்ள காவல் நிலையத்தில் இளைஞர் ஒருவர் காவல் துறை அதிகாரியை கடுமையாக தாக்கும் வீடியோக் காட்சிகள் வெளியாகியுள்ளது.

இளம் காவல் துறை அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் அந்த இளைஞர் பின்னர் கைகளால் தாக்கத் தொடங்கினார். பின்னர் அங்கிருந்த பிளாஸ்டிக் நாற்காலியையும் எடுத்து தாக்கினார். பின்னர் காவல் துறை அதிகாரியும் பதிலுக்கு தாக்கினார். இதனால் அருகிலிருந்தவர்கள் திகைத்து நின்றனர்.

குடும்ப பிரச்னை தொடர்பாக இளைஞருக்கு அறிவுரை கூற காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். அப்போதுதான் இந்த கைகலப்பு நிகழ்ந்தது. அந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாகவும் அதற்கான ஆவணங்கள் தரும் பட்சத்தில் அதைக்கொண்டு இவ்விவகாரத்தில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் அடுத்த கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மியான்புரி துணை காவல் கண்காணிப்பாளர் மதுவன் குமார் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com