சீனாவை சேர்ந்த 4 வயது சிறுமி கேரள சிறையிலடைப்பு!
சீனாவை சேர்ந்த 4 வயது சிறுமி கேரள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சீனாவை சேர்ந்த ஜியோலின் என்பவர் கேரள மாநிலம் காக்காநாட்டில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் தங்கியிருந்தார். அவருடன், 4வயது குழந்தையான ஹான் ரியு ஹெள, மற்றும் அவரது சகோதரர் சாங் க்வி ஹெள ஆகியோர் தங்கியிருந்தனர். இந்நிலையில் விசா காலம் முடிந்த பிறகும் அவர்கள் இந்தியாவில் தங்கியிருந்ததால், அவர்களை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். ஆனால் கேரளாவில் ஜியோலினுக்கு மற்ற உறவினர்கள் இல்லாததால் அந்த சிறுமியை தாயுடன் இருக்க அனுமதிக்குமாறு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அந்த சிறுமியும் தாயுடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அந்த குழந்தைக்கு சீன மொழியை தவிர மற்ற மொழி தெரியாது என்பதால், குழந்தை யாருடனும் சேராமல் துயரத்துடனே காணப்படுவதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.