மத்தியப் பிரதேசத்தில் சாத்னா என்ற இடத்தில் அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுஹானின் ஹெலிகாப்டர் தரையிறங்கவிருந்த நேரத்தில் அங்கு ஒரு பன்றி சுற்றித் திரிந்ததால் சிறிது நேரம் குழப்பம் நிலவியது.
சாத்னா மாவட்டம் பிர்சிங்பூரில் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுஹான் பங்கேற்கும் விழாவுக்கான ஏற்பாடுகள் தயாராய் இருந்தது. அப்போது விழா நடக்கும் இடத்தில் பன்றி ஒன்று நுழைந்தது. தரையிரங்கும் தளத்திற்கு வெகு அருகில் திடீரென பன்றி வந்ததால் ஹெலிகாப்டர் இறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. சற்று நேரம் வானிலேயே வட்டமடித்த ஹெலிகாப்டர், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் பன்றியை விரட்டியபிறகு பத்திரமாக தரையிறக்கப்பட்டது. முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் பன்றி நுழைந்ததால் சற்று நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டு தாமதமாக விழா தொடங்கியது.