“அது விராட் கோலி மகளின் படம் அல்ல” - சகோதரர் விகாஸ் கோலி

“அது விராட் கோலி மகளின் படம் அல்ல” - சகோதரர் விகாஸ் கோலி

“அது விராட் கோலி மகளின் படம் அல்ல” - சகோதரர் விகாஸ் கோலி
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், நடிகை அனுஷ்கா ஷர்மாவிற்கும் நேற்று பெண் குழந்தை பிறந்தது. அந்த செய்தியை உற்சாக மிகுதியில் பகிர்ந்திருந்தார் விராட் கோலி.

இந்நிலையில் போர்வையால் சுற்றப்பட்ட பச்சிளம் குழந்தையின் கால்களை மட்டுமே வைத்து ‘WELCOME’ என அதில் எழுதி இருந்ததோடு ‘வீட்டுக்கு தேவதை வந்துள்ளாள்’ என கேப்ஷனும் போட்டு இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார் விராட் கோலியின் சகோதரர் விகாஸ் கோலி. 

அதையடுத்து கோலி மற்றும் அனுஷ்காவின் ரசிகர்கள் அந்த பதிவை கொண்டாடி தீர்த்தனர். பலரும் கமெண்ட் பாக்சில் வாழ்த்து மழை பொழிந்திருந்தனர். சமூக வலைத்தளங்களிலும் கோலி-அனுஷ்கா தம்பதியர் மகளின் முதல் படம் என வைரலாக பகிர்ந்திருந்தனர். 

தொடர்ந்து அந்த படம் பொதுவான படம்தான். செய்தியை உங்களிடம் சொல்வதற்காக பகிர்ந்த படம் என இப்போது விளக்கம் கொடுத்துள்ளார் விகாஸ் கோலி. “விராட்டையும், அனுஷ்காவையும் வாழ்த்த நேற்று நான் பகிர்ந்திருந்தது பொதுவான படம்தான். அது கோலி - அனுஷ்கா தம்பதி மகளின் படம் அல்ல. இது தொடர்பாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. அதனால் எல்லோருக்கமான புரிதலுக்காக இதை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்” என விகாஸ் இன்றைய பதிவில் சொல்லியுள்ளார். 

View this post on Instagram

A post shared by Vikas Kohli (@vk0681)

View this post on Instagram

A post shared by Vikas Kohli (@vk0681)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com