இந்தியா
10 வயது சிறுமியின் 32 வார கருவை கலைக்க கோரிய மனு தள்ளுபடி
10 வயது சிறுமியின் 32 வார கருவை கலைக்க கோரிய மனு தள்ளுபடி
கருவை கலைக்க அனுமதி கோரிய 10 வயது சிறுமியின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
10 வயது சிறுமியின் வயிற்றில் உள்ள 32 வார கருவை கலைக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. கருவை தற்போதைய நிலையில் கலைப்பது கருவுக்கோ அல்லது அதன் தாய்க்கோ நல்லது இல்லை என்ற மருத்துவக் குழு அறிக்கை அடிப்படையில் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
சண்டிகரை சேர்ந்த 10 வயது சிறுமி அவரது நெருங்கிய உறவினரால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டதன் விளைவாக கருவுற்றிருந்தார். இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது போன்ற கருக்கலைப்புக்கு அனுமதி கோரும் பிரச்னைகளுக்கு தீர்வு காண மாநில அரசுகள், மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்றை ஏற்படுத்த வேணடும் என்றும் கேட்டுக்கொண்டனர்.