”ஐ-பேடுக்கு அதிக விலை! என்னனு கேளுங்க சார்” ட்வீட் போட்ட நபரால் இணையதளத்தில் கலகலப்பு

”ஐ-பேடுக்கு அதிக விலை! என்னனு கேளுங்க சார்” ட்வீட் போட்ட நபரால் இணையதளத்தில் கலகலப்பு
”ஐ-பேடுக்கு அதிக விலை! என்னனு கேளுங்க சார்” ட்வீட் போட்ட நபரால் இணையதளத்தில் கலகலப்பு

ஐ-பேடுக்கு அதிக விலை போடுவதாக டிவிட்டரில் புகார் தெரிவித்த நபர் நுகர்வோர் விவகார அமைச்சகத்திற்குப் பதிலாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தைக் டேக் செய்ததால் கலகலப்பு ஏற்பட்டுள்ளது.

அமேசான் ஆப்பில் ஆப்பிள் ஐ-பேட் வாங்க விரும்பிய நபர் ஒருவர், அதன் விலை அதிகமாக இருந்ததால் நுகர்வோர் விவகார அமைச்சகத்திற்கு புகார் தெரிவிக்க நினைத்துள்ளார். அதிக விலை பட்டியல் இருக்கும் பக்கத்தை டிவிட்டரில் பகிர்ந்து அதை நுகர்வோர் விவகார அமைச்சகத்திற்கு டேக் செய்ய நினைத்த அந்த நபர் தவறுதலாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தை டெக் செய்து பதிவிட்டதால் கலகலப்பு ஏற்பட்டுள்ளது.

அவர் பதிவிட்டுள்ள அந்த பதிவில், "iPad Pro 11-inch ஒருபோதும் ₹1,76,900 ஆக இருந்ததில்லை. @MoCA_GoI நியாயமற்றதாக இருந்தால் நடவடிக்கை எடுக்கவும்” என்று குறிப்பிட்டு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தை டெக் செய்துள்ளார். அதை கவனித்த சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அவரது போஸ்ட்டை பகிர்ந்து பதில் அளித்திருப்பதுதான் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்திருப்பது, “நாங்கள் உதவ விரும்புகிறோம், ஆனால், நாங்கள் இந்தியாவிற்கு மலிவு விலையில் விமானப் பயணத்தை வழங்குவதில் மும்முரமாக இருக்கிறோம்." என்று தெரிவித்துள்ளது.

தற்போது இந்த பதிவு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com