இந்தியா
கட்சி நிர்வாகிக்கு பூக்களால் அபிஷேகம் செய்து ராஜ மரியாதை
கட்சி நிர்வாகிக்கு பூக்களால் அபிஷேகம் செய்து ராஜ மரியாதை
பெங்களூருவில் கட்சி நிர்வாகி ஒருவரை தொண்டர்கள் பூக்களால் அபிஷேகம் செய்து ராஜ மரியாதை அளிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த கோபால் என்பவரை தான் அவரது ஆதரவாளர்கள் கிலோகணக்கில் பூக்களால் அபிஷேகம் செய்கின்றனர். பூக்கள் மத்தியில் அவர் இருப்பது கூட தெரியாத அளவுக்கு தொண்டர்கள் ராஜ மரியாதை அளித்துள்ளனர். இதற்கு பல எதிர்மறையான விமர்சனமும் எழுந்துள்ளது.