இவர்கள் தெலங்கானாவின் ‘பேட்’உமன்கள்..!

இவர்கள் தெலங்கானாவின் ‘பேட்’உமன்கள்..!
இவர்கள் தெலங்கானாவின் ‘பேட்’உமன்கள்..!

தெலங்கானாவில் ஆதிவாசி பெண்களால் தயாரிக்கப்பட்டு வரும் நாப்கின்களுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளதையடுத்து கூடுதலாக 4 அலகுகள் அமைக்கப்பட்டு உள்ளன.

மாதவிடாய் காலத்தில் முன்பெல்லாம் பெண்கள் துணிகளை பயன்படுத்தி வந்தனர். நாளடைவில் சுகாதாரம் உள்ளிட்ட காரணங்களுக்காக நாப்பின்களை அவர்கள் பயன்படுத்தத் தொடங்கினர். இருப்பினும் நாப்பின்கள் பயன்படுத்தும்  பழக்கம் முழுவதுமாக கிராமங்களுக்கெல்லாம் சென்றுவிட்டதா..? என கேட்டால் இல்லை என்றே சொல்ல முடியும். அதேபோல ஆதிவாசி பெண்களுக்கும் நாப்கின்கள் வசதி கிடைப்பதில்லை.

இந்நிலையில் தெலங்கானாவில் ஆதிவாசிகள் பெண்களால் கடந்த பிப்ரவரி மாதம் மூலம் நாப்கின்கள் தயாரிக்கப்பட்டு வந்தது. அதனை இலவசமாக ஆதிவாசி மாணவிகளின் விடுதிக்கும், ஆசிரம பள்ளிகளுக்கும் அவர்கள் வழங்கி வந்தனர். பத்ராச்சலம், உட்னூர், மன்னனூர், ஈட்டுநகரம் உள்ளிட்ட பகுதிகளில் 4 அலகுகள் அமைக்கப்பட்டு அதன்மூலம் ஆதிவாசி பெண்கள் நாப்கின்கள் தயாரிக்கப்படுகின்றன. இதன்மூலம் மாதத்திற்கு 6,000 முதல் 7000 நாப்கின்கள் தயாரிக்க முடியும். ஒருங்கிணைந்த பழங்குடி மேம்பாட்டு முகமை சார்பில் இந்த அலகுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆதிவாசி பெண்களால் தயாரிக்கப்படும் நாப்கின்களின் தேவை அதிகரித்துள்ளதால் கூடுதலாக 4 அலகுகள் அமைக்கப்பட உள்ளன.

இதுகுறித்து  கிரிஜன் கூட்டுறவு கழகத்தின் துணை பொது செயலாளர் கூறும்போது, “ புதிய அலகுகள் மூலம் ஒரு காலாண்டிற்கு 40,000 நாப்கின்கள் தயாரிக்க முடியும். பின்னர் அந்த நாப்கின்கள் ஆதிவாசி சமூக மக்களுக்கு வழங்கப்படும். தெலங்கானாவில் நிறைய ஆதிவாசி பெண்கள் இன்னும் மாதவிடாய் காலத்தில் இன்னும் துணிகளை பயன்படுத்தி வருகின்றனர். புது அலகிற்கான பணம் ஒதுக்கப்பட்ட பின்னர் வெவ்வேறு விதமான நாப்கின்கள் தயாரிக்கப்படும். இதன்மூலம் ஒவ்வொரு அலகிலும் 30 பெண்களுக்கு வேலை கிடைக்கும். மொத்தமாக 120 பெண்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது” என்றார்.

ஏழைப் பெண்கள் குறைந்த செலவில் நாப்கின்களை பயன்படுத்தும் வகையில் இயந்திரம் ஒன்றைக் கண்டுபிடித்து சாதனைப் புரிந்தவர் தமிழர் அருணாச்சலம் முருகானந்தம். இந்தியாவில் 60 சதவீத ஏழைப் பெண்கள் நாப்கின் வாங்கும் வசதியின்றி வாழும் அவலம் நிலவுகிறது. இந்நிலையைப் போக்க முயன்ற முருகானந்தம், தன் பல ஆண்டுக்கால விடாத முயற்சியால், பிரத்யகே இயந்திரம் தயாரித்து, அதன்மூலம் தயாரிக்கப்படும் நாப்கின்களை விற்பனைக்குக் கொண்டு வந்தார்.

பெண்களுக்காக ஆரோக்கியமான நாப்கினை குறைந்த செலவில் தயாரித்த தமிழகத்தின் கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்பவரின் வாழ்க்கையை மையமாக கொண்டது பேட்மேன் என்ற படமும் வெளிவந்தது. அக்‌ஷய் குமார், சோனம் கபூர், ராதிகா ஆப்தே நடித்துள்ள பேட்மேன் திரைப்படத்தை தமிழரான ஆர்.பால்கி இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருந்தது.

Courtesy: TheHindu

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com