\
கர்நாடகாவின் அடுத்த முதல்வர் பிரகலாத் ஜோஷியா?

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் பிரகலாத் ஜோஷியா?

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் பிரகலாத் ஜோஷியா?
Published on

கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சராக தன்னை நியமிப்பது குறித்து கட்சித் தலைமை தன்னிடம் எதுவும் பேசவில்லை என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதலமைச்சர் பதவியிலிருந்து எடியூரப்பா சில நாட்களில் விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எடியூரப்பாவிற்கு பதிலாக முதலமைச்சராக மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நியமிக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் தன்னை முதலமைச்சராக நியமிப்பது குறித்து தன்னிடம் கட்சித் தலைமை எதுவும் பேசவில்லை என ஜோஷி விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில், எடியூரப்பாவை நீக்கினால் கர்நாடகாவில் பாரதிய ஜனதா அழியத்தொடங்கும் என லிங்காயத்து சமூக தலைவர்கள் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளிக்க ஜோஷி மறுத்துவிட்டார். இதற்கிடையில் எடியூரப்பா சார்ந்த லிங்காயத்து சமூக மடாதிபதிகள் பெங்களூருவில் இன்று ஆலோசனை நடத்த உள்ளது அரசியல் ரீதியான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com