“மத ரீதியில் புனிதமான முக்கோண வடிவில் புதிய நாடாளுமன்றம் கட்டப்படும்”-வடிவமைப்பாளர் பிமல்

“மத ரீதியில் புனிதமான முக்கோண வடிவில் புதிய நாடாளுமன்றம் கட்டப்படும்”-வடிவமைப்பாளர் பிமல்
“மத ரீதியில் புனிதமான முக்கோண வடிவில் புதிய நாடாளுமன்றம் கட்டப்படும்”-வடிவமைப்பாளர் பிமல்

டெல்லியில் புதிதாக கட்டப்பட உள்ள நாடாளுமன்ற கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். சுமார் 971 கோடி ரூபாய் செலவில் இந்த பணிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில் மத ரீதியில் புனிதமான முக்கோண வடிவில் புதிய நாடாளுமன்றம் கட்டப்படும் என தெரிவித்துள்ளார் கட்டிட வடிவமைப்பாளர் பிமல் பட்டேல். 

“நாட்டின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் புதிய நாடாளுமன்றம் காட்டப்படும். முக்கோணம் என்பது பல்வேறு மதங்களுக்கும் உள்ள புனிதமான அம்சம் என்பதால் ஒட்டுமொத்த கட்டிடத்தின் வடிவமும் முக்கோண வடிவத்திலேயே இருக்கும். அதோடு நாட்டின் மூன்று சின்னங்களான மயில், தாமரை மற்றும் ஆலமரம் ஆகியவற்றுக்கும் நாடாளுமன்ற கட்டிட வடிவமைப்பில் முக்கியத்துவம் கொடுக்கப்படும். 

நவீன் வசதிகள் இருந்தாலும் பாரம்பரியத்திற்கு அதிக முக்கியதத்துவம் கொடுக்கப்படும். மேலும் நாடாளுமன்ற கட்டிடத்தின் உச்சியில் தேசிய சின்னமான நான்கு தலைகள் கொண்ட சிங்க உருவம் வைக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com