\
ராகுல் காந்தி மீது நடவடிக்கைக்கோரி இன்ஸ்டாகிராம் நிறுவனத்துக்கு கடிதம்

ராகுல் காந்தி மீது நடவடிக்கைக்கோரி இன்ஸ்டாகிராம் நிறுவனத்துக்கு கடிதம்

ராகுல் காந்தி மீது நடவடிக்கைக்கோரி இன்ஸ்டாகிராம் நிறுவனத்துக்கு கடிதம்
Published on
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் பெற்றோர் விவரங்களை வெளியிட்ட ராகுல் காந்தி மீது நடவடிக்கைக்கோரி, இன்ஸ்டாகிராம் நிறுவனத்துக்கு தேசிய குழந்தைகள் நல ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் பெற்றோர் குறித்த விவரங்களை வெளியிட்டதற்காக, ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது. இந்நிலையில், ராகுல் காந்தியின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் சிறுமியின் பெற்றோர் குறித்த விவரங்கள் தெளிவாக வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
எனவே, ராகுலின் பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, இன்ஸ்டாகிராம் நிறுவனத்தை நடத்தும் ஃபேஸ்புக்குக்கு தேசிய குழந்தைகள் நல ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com