மதக் கலவரத்தை உண்டாக்குவது கேரள வெடிகுண்டு தாக்குதலின் நோக்கமா? - NIA தீவிர விசாரணை

மதக் கலவரத்தை உண்டாக்குவது கேரள வெடிகுண்டு தாக்குதலின் நோக்கமா என கண்டறிய மத்திய அரசு தேசிய புலனாய்வு முகமை மற்றும் NSG கமாண்டோ குழு நிபுணர்களை களத்தில் இறக்கி உள்ளது.
kerala bomb blast
kerala bomb blast pt desk

வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டது யார் என கண்டறிந்த பின்னரே இந்த தாக்குதலின் நோக்கம் என்ன என்பது தெளிவாக தெரியவரும் என உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே ஒரு நபர் நான் தான் இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு பொறுப்பு என கேரள போலீஸ் அதிகாரிகளிடம் சரணடைந்துள்ள நிலையில், அவர் சொல்வது உண்மையா என தற்போது விசாரணை நடந்து வருகிறது.

மேலும் 2000 நபர்கள் குழுமிய இடத்தில் திட்டமிட்டு கடுமையான பாதிப்பு ஏற்படும் வகையில் வெடிகுண்டு தாக்குதலை ஒரு தனி நபரால் நடத்த இயலுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

Martin
Martinpt desk

ஆகவே தான் இந்த தாக்குதலின் பின்னணியில் ஒரு அமைப்பு இருக்கக்கூடும் எனவும் அது என்ன அமைப்பு என்பதை விரைவாக கண்டறிய வேண்டும் என கேரளா போலீஸ் சிறப்பு படை மற்றும் NSG என அழைக்கப்படும் தேசிய பாதுகாப்பு முகமை விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் எத்தகைய வெடி மருந்து பயன்படுத்தப்பட்டது மற்றும் அது எந்த வகையில் வெடிக்க வைக்கப்பட்டது என்பதை கண்டறியும் முயற்சியில் NSG என அழைக்கப்படும் 'நேஷனல் செக்யூரிட்டி கார்ட்ஸ்' அமைப்பு துப்புதுலக்கி வருகிறது.

வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது யார் மற்றும் அவர்களுடைய நோக்கம் என்ன என்பது விரைவில் கண்டறியப்படும் என கேரள போலீஸ் அதிகாரிகள் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தகவல் அளித்துள்ளனர். அதே சமயத்தில் Nஐயு மற்றும் NSG குழுக்களும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளன.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com