\
உதவி ஆட்சியரை காதலித்து கரம்பிடித்த எம்.எல்.ஏ

உதவி ஆட்சியரை காதலித்து கரம்பிடித்த எம்.எல்.ஏ

உதவி ஆட்சியரை காதலித்து கரம்பிடித்த எம்.எல்.ஏ
Published on

கே‌ரளாவில் எம்எல்ஏவை, உதவி ஆட்சியர் ஒருவர் காதலித்து கரம் பிடித்துள்ளார். 
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் அவர்கள் இருவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. கேரள முன்னாள் சபாநாயகரின் மகனும், அருவிக்கரை தொகுதி எம்எல்ஏவுமான சபரிநாதனுக்கும், திருவனந்தபுரம் உதவி ஆட்சியர் திவ்யாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டும் வந்தது. இந்த ‌சூழலில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகேயுள்ள குமாரகோவிலில் இருவரும் இன்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில், கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிலதா உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com