ரயிலில் அடிபட்டு உயிரிழந்த யானைகள் எத்தனை? - மத்திய ரயில்வே அமைச்சகம் பதில்

ரயிலில் அடிபட்டு உயிரிழந்த யானைகள் எத்தனை? - மத்திய ரயில்வே அமைச்சகம் பதில்
ரயிலில் அடிபட்டு உயிரிழந்த யானைகள் எத்தனை? - மத்திய ரயில்வே அமைச்சகம் பதில்

நாடு முழுவதும் கடந்த ஏழு மாதங்களில் 7 யானைகள் ரயில்களில் அடிபட்டு உயிரிழந்து உள்ளது என மத்திய ரயில்வே அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மக்களவையில் பதிலளித்துள்ள மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கடந்த 2017ம் ஆண்டு 15 யானைகளும்  2018ம் ஆண்டு 26 யானைகளும், 2019ம் ஆண்டு 10 யானைகளும், 2020ம் ஆண்டு 16 யானைகளும் மற்றும் 2021ம் ஆண்டில் 19 யானைகளும் ரயில்களில் அடிபட்டு உயிரிழந்துள்ளன. 2022ம் ஆண்டில் ஜூலை மாதம் வரை 7 யானைகள் ரயில் விபத்துகளில் உயிரிழந்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இத்தகைய ரயில் விபத்துகளில் யானைகள் மற்றும் வனவிலங்குகள் அடிபட்டு உயிரிழப்பதை தடுப்பதற்கு மத்திய ரயில்வே அமைச்சகம் ரயில்வே அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளதாகவும் குறிப்பாக கிராம மக்கள் ரயில்வே தண்டவாளங்கள் அருகில் வனவிலங்குகளை வரவிடாமல் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அவ்வப்போது எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: நுபுர் சர்மாவை கொலை செய்ய இந்தியாவுக்கு வந்த பாக். தீவிரவாதி - பகீர் தகவல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com