இந்தியா
லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம்
லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம்
கொரோனா தொற்று ஏற்பட்டு மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.
இனிமையான குரல் வளத்தால் இசை ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் லதா மங்கேஷ்கர். 92 வயதான இவர், கடந்த வாரம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, மும்பையில் உள்ள Breach Candy மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் லதா மங்கேஷ்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் குழுவினர் அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர். அவரை நேரில் சந்திக்க மருத்துவமனை நிர்வாகம் யாரையும் அனுமதிக்கவில்லை.
லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.