அக்னிபாத் திட்ட எதிர்ப்பு போராட்டம்: ரயில்வே துறைக்கு ரூ.700 கோடி இழப்பு

அக்னிபாத் திட்ட எதிர்ப்பு போராட்டம்: ரயில்வே துறைக்கு ரூ.700 கோடி இழப்பு
அக்னிபாத் திட்ட எதிர்ப்பு போராட்டம்: ரயில்வே துறைக்கு ரூ.700 கோடி இழப்பு

அக்னிபாத் திட்ட எதிர்ப்பு போராட்டங்களால் ரயில்வே துறைக்கு ஏற்பட்ட இழப்பு 700 கோடியாக அதிகரித்துள்ளது. இதுவரை 718 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முப்படைகளில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பீகாரில் ரயில் பெட்டிகள், ரயில் நிலையங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டதால் பலத்த சேதமடைந்துள்ளன. 60 ரயில் பெட்டிகள், 11 என்ஜின்கள் எரிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஒரு ரயில் பெட்டியை தயாரிக்க 80 லட்சமும், ஏசி ரயில் பெட்டியை தயாரிக்க மூன்றரை கோடியும் செலவாகிறது. இதன் மூலம் போராட்டங்களால் ரயில் பெட்டிகள் சேதப்படுத்தப்பட்டதில், ரயில்வே துறைக்கு 700 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகாரில் ரயில்வே சொத்துகளை சேதப்படுத்தியது தொடர்பாக 25 வழக்குகள் பதியப்பட்டு இதுவரை 718 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com