இந்தியா
சொந்தக் காலில் நின்ற லேண்டர்.. ஆக. 23ம் தேதி நாடே எதிர்பார்த்த முக்கிய நிகழ்வு!
சந்திரயான் 3 விண்கலத்தின் உந்துவிசை கலனில் இருந்து லேண்டர் இன்று வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
சந்திரயான் 3 விண்கலத்தின் உந்துவிசை கலனில் இருந்து லேண்டர் இன்று வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நிலவை ஆய்வு செய்ய விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலம், தன் வெற்றிப் பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. சந்திரயான் விண்கலத்திற்கும், நிலவுக்கும் இடையிலான தொலைவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், விண்கலத்தின் உந்துவிசை கலனில் இருந்து லேண்டர் இன்று வெற்றிகரமாக பிரிக்கப்பட்டு நிலவின் மேற்பரப்பில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
நாளை மாலை 4 மணிக்கு, லேண்டரும், நிலவுக்கும் இடையிலான உயரம் குறைக்கப்படும் என்றும், படிப்படியாக உயரம் குறைக்கப்பட்டு வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவின் தென் துருவப் பகுதியில் லேண்டர் தரையிறங்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.