‘குட் மார்னிங்’ சொல்லியே இணையத்தை நிரப்பும் இந்தியர்கள்
இந்தியாவில் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் பயனீட்டாளர்கள் குட்மார்னிங் என்ற வாழ்த்து செய்தியுடனே அன்றைய தினத்தை தொடங்குகின்றனர்.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாளுக்கு அதிகரித்து வருகிறது. தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியா மிகப்பெரிய சந்தையாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு பல்வேறு மொபைல்போன், நெட்வொர்க் நிறுவனங்கள் இந்தியாவை குறிவைக்கின்றனர். குறைந்த விலை ஸ்மார்ட்போன்கள், சலுகைகளுடன் நெட்வொர்க் என அதிரவைக்கின்றனர். எவ்வளவு விலையில் ஸ்மார்ட்போன்கள் வாங்கினாலும் நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் போது திடீரென ஹேங் ஆகிவிடும். எவ்வளவு மெமரி கொண்ட ஃபோன்களை வாங்கினாலும் ஸ்பேஸ் இல்லை என காண்பிக்கும். எதனால் இதுபோன்று ஆகிறது என்றால் ஆராய்ந்தால் ஒரு இன்ப அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
இந்தியாவில் தினமும் காலையில் ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்றவற்றில் காலை நேரத்தில் குட்மார்னிங் என்று நாம் அனுப்பும் வாழ்த்து செய்தியே இதற்கு காரணம். தினமும் வாட்ஸ் ஆப்பில் நண்பர்கள், உறவினர்கள், குழுக்கள் போன்றவற்றில் இருந்து குறைந்தது நாள் ஓன்றுக்கு 50 வாழ்த்து செய்தியாவது வரும். மற்ற செய்திகளை விட இந்த வாழ்த்து செய்திதான் அதிகம். கடந்த 5 ஆண்டுகளில் கூகுளில்‘ஃபெஸ்ட் குட் மார்னிங் இமேஜஸ்’தேடல் 10 மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.
புத்தாண்டு தினத்தில் நண்பர்கள், உறவினர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை மெசேஜ், ஈமெயில், கால் செய்து பகிர்ந்து கொள்வது வழக்கம்.அந்த வகையில் வாட்ஸ்அப் செயலியின் வருகைக்கு பின்னர், புத்தாண்டு வாழ்த்துகளில் வாட்ஸ்அப் சேவையும் முக்கியமான இடத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் சரியாக டிசம்பர் 31, 2017 இரவு 11:59 மணியில் இருந்து புதிய ஆண்டு பிறக்கும் 12 மணி வரை உள்ள இடைவெளியில் இந்தியாவில் மட்டும் சுமார் 20 பில்லியன் மக்கள் தங்களின் உறவினர்கள் மட்டும் நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இந்த 20 பில்லியன் மக்கள் பயன்பாட்டினால் வாட்ஸ்அப் செயலி மிகப்பெரிய மைல்கல்லை அடைந்திருப்பதாகவும் அந்நிறுவனம் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தது.இதனால் சில மணி நேரம் வாட்ஸ்அப் சேவை முடங்கியது.