ஏன், எதற்கு, எப்படி? ராணுவ அதிகாரி மனைவி கொலையில் அதிர்ச்சி தகவல்கள்!

ஏன், எதற்கு, எப்படி? ராணுவ அதிகாரி மனைவி கொலையில் அதிர்ச்சி தகவல்கள்!

ஏன், எதற்கு, எப்படி? ராணுவ அதிகாரி மனைவி கொலையில் அதிர்ச்சி தகவல்கள்!
Published on

டெல்லி ராணுவ மேஜர் மனைவி கொலையில் மற்றொரு அதிகாரி கைது செய்யப்பட்டது எப்படி? என்கிற தகவலை போலீசார் தெரிவித்துள்ளனர்.

டெல்லி கண்டோன்மென்ட் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, இளம் பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் சனிக்கிழமை பிணமாகக் கிடந்தார். இதுபற்றி அந்த வழியாக சென்றவர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்தப் பெண்ணின் கழுத்து அறுக்கப்பட்டும் முகம் சிதைக்கப்பட்டும் இருந்தது தெரிய வந்தது. இந்நிலையில் தனது மனைவியை காணவில்லை என்று டெல்லியின் மேற்கு பதியில் வசிக்கும் ராணுவ அதிகாரி அமித் திவிவேதி போலீசில் புகார் அளித்தர். அப்போது சாலையில் கொல்லப் பட்டுக் கிடந்த பெண்ணை அவரிடம் காட்டி விசாரித்தனர். அது தனது மனைவிதான் என்றார் அமித். 

போலீசார் விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் அமித்தின் நண்பரும் மற்றொரு ராணுவ அதிகாரியுமான நிகில் ராய் ஹண்டா மீது சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் அவரை தேடியபோது அவர் தலைமறைவானார். பின்னர் அவரை மீரட் நகரில் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தலைநகர் டெல்லியில் பரபரப்பாகியுள்ளது. 

ராணுவ மேஜர் அமித் நாகலாந்தில் பணியாற்றிய போது, ஹண்டாவுக்கு பழக்கம் . அப்போது சைலஜா மீது ஆசை கொண்டார் ஹண்டா. திருமணமான பெண்களுக்கான அழகிப் போட்டியில் பரிசு வென்றவர் சைலஜா. இதற்கிடையில் அமித் டிரான்ஸ்பரில் டெல்லிக்கு  வந்தார். பிறகும் ஹண்டாவுடன் சைலஜா நட்பைத் தொடர்ந்துள்ளார். ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சைலஜாவை வற்புறுத்தியுள்ளார் ஹண்டா. இது தொடர்பாக இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டதால் கழுத்தை அறுத்துக்கொன்றுள்ளார் . இந்நிலையில் வெறும் 20 மணி நேரத்தில் ஹண்டாவை கைது செய்தது எப்படி என்பதை போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஹண்டாவின் மகன் டெல்லி, ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறான். அதே மருத்துவமனையில் பிசியோதெரபி சிகிச்சை பெற்று வந்தார் சைலஜா. ஹண்டா, சைலஜாவுக்கு ஃபோன் செய்து, ’மருத்துவமனைக்குச் செல்கிறேன், நீயும் வா, சந்திக்கலாம்’ என்று கூறியிருக்கிறார். சென்றார் சைலஜா.

மருத்துவமனையின் வெளியே தனது ஹோண்டா சிட்டி காரில் காத்திருந்த ஹண்டா, சைலஜா வந்ததும் அதில் ஏற்றிக்கொண்டார்.  காரில் இருவரும் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகச் சுற்றியுள்ளனர். டெல்லி கண்டோன்மென்ட் மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன் அருகே வந்தபோது இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. திடீரென்று கத்தியால் சைலஜாவின் கழுத்தை அறுத்தார் ஹண்டா. இதை எதிர்பார்க்காத அவர், ரத்த வெள்ளத்தில் காரில் இருந்து குதித்து தப்பிக்க முயன்றார். ஆனால், ஹண்டா காரை வேகமாக இயக்கி அவர் மீது ஏற்றிக் கொன்றுவிட்டு தப்பினார்.

வீட்டுக்கு வந்தபோது ஹண்டாவின் பெற்றோர், ‘உன் நெற்றியின் என்ன காயம்?’ என்று விசாரித்துள்ளனர். அப்போதுதான் தனக்கும் காயம் ஏற்பட்டிருக்கிறது என்பதை ஹண்டா, சின்ன விபத்து என்று சொல்லிவிட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு போலீசார் நின்றுகொண்டிருப்பதைக் கண்டதும் சத்தம்போடாமல் திரும்பிச் சென்றுள்ளார். 

போலீசார், ஹண்டாவின் வீட்டுக்குச் சென்றபோது, அவரது கார் அங்கில்லை. அவரது உறவினர்களுக்கும் அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. அவர், இதற்கு முன் மீரட்டில் பணியில் இருந்தார் என்பதும் ஒருவேளை அங்கு சென்றிருக்கலாம் என்றும் சிலர் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு விரைந்தனர் போலீசார்.

அதற்கு முன்பாக, சுமார் 200 சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து அவரது கார் எங்கெல்லாம் சென்றிருக்கிறது என்பதை கண்டுபிடித்தனர். அவர் கார் எண், சில கேமராவில் சரியாகத் தெரியவில்லை. இதனால் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் வெவ்வேறு கேமராவில் பார்த்து ஷூம் செய்து கண்டுபிடித்தனர். மீரட் சென்ற போலீசார் சுமார் 500 கெஸ்ட் ஹவுஸ்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு வீட்டில் இருந்த அவர், போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்றபோது அவரை பிடித்து கைது செய்தனர்.

சைலஜாவின் சகோதரர் கூறும்போது, ’சைலஜா எல்லோரிடமும் சகஜமாக பழகுபவர். அதைத் தவறாகப் புரிந்துகொண்ட ஹண்டா, அவரை தொந்தரவு செய்துள்ளார்’ என்று தெரிவித்துள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com