வங்கக் கடலில் உருவானது 'குலாப்' புயல்: இன்று மாலை கரையைக் கடக்கிறது

வங்கக் கடலில் உருவானது 'குலாப்' புயல்: இன்று மாலை கரையைக் கடக்கிறது

வங்கக் கடலில் உருவானது 'குலாப்' புயல்: இன்று மாலை கரையைக் கடக்கிறது
Published on
வங்கக் கடலில் உருவாகியுள்ள குலாப் புயல் ஒடிஷா மாநிலம் கோபால்பூர், ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் இடையே இன்று மாலை கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடந்த 24ஆம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக உருமாறியது. குலாப் என பெயரிடப்பட்டுள்ள இப்புயல், மேற்கு நோக்கி நகர்ந்து இன்று மாலை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையைக் கடக்கும்போது 85 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com