உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு உதவ அவசர உதவி எண் அறிவிப்பு

உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு உதவ அவசர உதவி எண் அறிவிப்பு

உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு உதவ அவசர உதவி எண் அறிவிப்பு
Published on

உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காக அங்குள்ள இந்திய தூதரகம் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளும் வகையில் உதவி எண்ணை அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கலாம் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் அங்குள்ள இந்தியர்கள் தாயகம் திரும்ப மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக உக்ரைனில் உள்ள இந்தியர்கள் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள 380997300483 என்ற எண்ணையும், மின்னஞ்சல் முகவரியையும் அறிவித்துள்ளது. இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க தூதரகம் தொடர்ந்து இயங்குவதாகவும் அனைத்து இந்தியர்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்கள் பதற்றமடைய வேண்டாம் என கேட்டு கொண்டுள்ள வெளியுறவு துறை அமைச்சகம், இந்தியா - உக்ரைன் இடையே கூடுதலாக விமானங்களை இயக்குவது தொடர்பாக அரசு ஆலோசனை செய்து வருவதாக கூறியுள்ளது.

இதையும் படிக்க: உக்ரைன் நேட்டோவில் இணைய விரும்புவது ஏன்? - ரஷ்யா அதனை எதிர்ப்பது ஏன்?

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com