\
“டேக் கேர் சென்னை; காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஒரு வேண்டுகோள்" - ராகுல் காந்தி

“டேக் கேர் சென்னை; காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஒரு வேண்டுகோள்" - ராகுல் காந்தி

“டேக் கேர் சென்னை; காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஒரு வேண்டுகோள்" - ராகுல் காந்தி
Published on

”சென்னையில் இடைவிடாது பெய்து வரும் மழை கவலையை ஏற்படுத்தியுள்ளது” என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவில், “சென்னையில் இடைவிடாது பெய்து வரும் மழை கவலையை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தில் உள்ள நமது சகோதர சகோதரிகள் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம். காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஒரு வேண்டுகோள்- தயவுசெய்து நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் உதவுங்கள். டேக் கேர் சென்னை” என பதிவிட்டுள்ளார்.

சென்னையில் நேற்று முதல் இடைவிடாது கொட்டித் தீர்க்கும் கனமழையால், பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம்போல சூழ்ந்துள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, மக்கள் பல்வேறு சிரமத்திற்கும் ஆளாகியுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com