புதுச்சேரியை எந்த அண்டை மாநிலத்துடனும் இணைக்கும் எண்ணம் இல்லை: கிஷன் ரெட்டி

புதுச்சேரியை எந்த அண்டை மாநிலத்துடனும் இணைக்கும் எண்ணம் இல்லை: கிஷன் ரெட்டி
புதுச்சேரியை எந்த அண்டை மாநிலத்துடனும் இணைக்கும் எண்ணம் இல்லை: கிஷன் ரெட்டி

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை எந்த அண்டை மாநிலத்துடனும் இணைக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்றும் தொடர்ந்து யூனியன் பிரதேசமாகவே செயல்படும் எனவும் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி உறுதியளித்துள்ளார்

புதுச்சேரி மாநில பாஜக சார்பில் "புதுவையில் காண்போம் இனியொரு நல்லாட்சி" காங்கிரஸ் இல்லா புதுச்சேரி என்ற பொதுக் கூட்டம் ஏ.எப்.டி மைதானத்தில் நடைபெற்று. கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, நடிகை குஷ்பு, மாநில பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, மாநில தலைவர் சாமிநாதன் உள்ளிட்ட 2000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர்.

அப்போது பேசிய நடிகை குஷ்பு, "முதலமைச்சர் நாராயணசாமி ஆட்சியில் ஊழல், லஞ்சம்தான் உள்ளது. ரேஷன் கடை மூடப்பட்டுள்ளது, அரசு ஊழியர்களுக்கு ஊதியம் இல்லை, 60% பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. 57% போதை பொருள் புதுச்சேரியில் விற்பனை செய்யப்படுகிறது. மக்களுக்கு நல்ல திட்டங்களை கொடுக்காமல் ஆளுநர் மீது குறை கூறி வருகிறார் நாராயணசாமி” எனத் தெரிவித்தார்.

மேலும் ஊழலை பற்றி யார் வேண்டுமாலும் பேசலாம். ஆனால் திமுகவும் காங்கிரசும் ஊழலை பற்றி பேசக்கூடாது என தெரிவித்த அவர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாஜக வெற்றி காத்திருக்கிறது எனத் தெரிவித்தார்.

கூட்டத்தில் தொடர்ந்து பேசிய மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களையும் காங்கிரஸ் கண்மூடித்தனமாக எதிர்பதாக குற்றம்சாட்டினார். மேலும் புதுச்சேரியை அண்டை மாநிலத்துடன் இணைக்க மத்திய அரசு முயற்சித்து வருவதாக முதல் அமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்கள் பொய் பிரச்சாரம் செய்து வருவதாகவும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை எந்த மாநிலத்துடன் இணைக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்றும் கூறினார். மேலும் ஒருபோதும் புதுச்சேரி மற்ற மாநிலங்களுடன் இணைக்கப்படாது என்றும் யூனியன் பிரதேசமாக புதுச்சேரி தொடரும் எனவும் அவர் உறுதியளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com