வெளியானது தேர்தல் முடிவுகள்; டிச.6ல் ‘I.N.D.I.A’ ஆலோசனை கூட்டம்; கூட்டணி தலைவர்களுக்கு காங். அழைப்பு

நான்கு மாநில தேர்தலின் முடிவுகளை அடுத்து ‘I.N.D.I.A’ ’ கூட்டணி வரும் 6 ஆம் தேதி கூட்டப்படும் என்று ‘I.N.D.I.A’ கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
‘I.N.D.I.A’  கூட்டணி
‘I.N.D.I.A’ கூட்டணி புதிய தலைமுறை

நான்கு மாநில தேர்தலின் முடிவுகளை அடுத்து ‘I.N.D.I.A’ ’ கூட்டணி வரும் 6 ஆம் தேதி கூட்டப்படும் என்று ‘I.N.D.I.A’ கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். இதில் முதல்வர் மு.. க. ஸ்டாலின் கலந்துகொள்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலானது கடந்த நவம்பர் 7 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி முடிவடைந்தது.

இந்நிலையில் மிசோரம் தவிர 4 மாநில சட்டசபை தேர்தலின் வாக்குகள் இன்று (3.12.2023) காலை 8 மணி அளவில் தொடங்கின.

இந்நிலையில் மதியம் ஒரு மணி நிலவரப்படி சத்தீஸ்கர், ம.பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. தெலங்கான தேர்தல் களத்தில் மட்டுமே காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜீன கார்கே
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜீன கார்கே

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே I.N.D.I.A’ கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அதில், “நான்கு மாநில தேர்தலின் முடிவுகளை அடுத்து ‘I.N.D.I.A’ ’ கூட்டணி வரும் 6 ஆம் தேதி கூட்டப்படும்” என்று கூறியுள்ளார்.

எனவே இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறும் ’ I.N.D.I.A’ கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்புவிடபட்டிருக்கிறது. எனவே இதற்காக அவர் டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘I.N.D.I.A’  கூட்டணி
இந்தியா கூட்டணி சார்பில் 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவிப்பு - ராகுல், சோனியா இடம்பெறவில்லை

I.N.D.I.A’ கூட்டணியானது சட்டமன்ற தேர்தலில் தனித்தனியே போட்டியிட்ட நிலையில், மக்களவை தேர்தல் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரியப்படுகிறது.

I.N.D.I.A’ கூட்டணி

வரும் 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை ஒற்றுமையுடன் சந்திப்பதற்காக காங்கிரஸ் திமுக இடதுசாரிகள் சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்து ’இந்தியா’ என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. பாஜகாவை வீழ்த்த நாடு முழுவதும் இருக்கும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இந்தியத் தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணிதான் I.N.D.I.A கூட்டணி.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com