'நிர்பந்தம்.. அப்படி சொன்னேன்' - 139 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரளித்த பெண்.!

'நிர்பந்தம்.. அப்படி சொன்னேன்' - 139 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரளித்த பெண்.!

'நிர்பந்தம்.. அப்படி சொன்னேன்' - 139 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரளித்த பெண்.!
Published on

ஹைதராபாத்தில் வசித்து வரும் 25 வயதான பெண் ஒருவர் அண்மையில் தன்னை 139 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியதோடு போலீசிலும் அது குறித்து புகார் கொடுத்திருந்தார். 

இந்நிலையில் அந்த குற்றச்சாட்டு தவறானது என அவர் நேற்று மறுத்துள்ளார்.

‘கட்டாயத்தின் பேரில் திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் மாணவர் தலைவர்கள் உட்பட கிட்டத்தட்ட 139 பேர் என்னை பலத்தகாரம் செய்ததாக சொல்ல வேண்டிய நிர்பந்தம் எனக்கு ஏற்பட்டது. 

இதற்கெல்லாம் காரணம் ராஜா ஸ்ரீகர் ரெட்டி என்பவர் எனக்கு கொடுத்த அச்சுறுத்தலால் தான் நடந்து. எனது போட்டோக்களையும், வீடியோவையும் வைத்துக் கொண்டு என்னையும், எனது குடும்பத்தாரையும் அவர் மிரட்டியதால் அப்பாவிகளின் மீது நான் பொய் குற்றச்சாட்டு வைக்க வேண்டியிருந்தது.

இந்த செயலுக்காக எல்லோரிடமும் நான் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’ என அந்த பெண் அவர் தெரிவித்துள்ளார் .

கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதியன்று பஞ்சகுட்டா போலீஸ் ஸ்டேஷனில் தன்னை 139 பேர் 5000 முறைக்கு மேல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியங்களின் அடிப்படையில் இந்த வழக்கை விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com